தமிழ்நாடு

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்ப முடிவு

DIN

கர்நாடக மாநிலம் குடகில் தனியார் விடுதியில் தங்கியுள்ளடிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்ப முடிவு செய்துள்ளனர். 
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த மாதம் 22-ஆம் தேதி ஆளுநரிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடிதம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் தங்கியிருந்த அவர்கள் தங்களது இருப்பிடத்தை கர்நாடகத்துக்கு மாற்றினர். அங்கு கடந்த 10 நாள்களுக்கும் மேலாகத் தங்கியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தவும் தடை விதித்து நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஓரிரு நாளில் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து தமிழகம் திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் தமிழகம் திரும்பியதும் அவர்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT