தமிழ்நாடு

பிரதமரின் 'தூய்மையே சேவை'  திட்டத்துக்கு ரஜினி ஆதரவு!

மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை முன்னிறுத்தும் வகையில், 'தூய்மையே சேவை' என்ற பிரசாரத்தை...

எழில்

பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசின் தூய்மையே சேவை திட்டத்துக்கு என் ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன். தூய்மையே கடவுள் என்று கூறியுள்ளார்.

மத்திய அரசின் 'தூய்மை இந்தியா' திட்டத்தை முன்னிறுத்தும் வகையில், 'தூய்மையே சேவை' என்ற பிரசாரத்தை மத்திய குடிநீர், துப்புரவுத் துறை மேற்கொள்கிறது. நாடு முழுவதும் 14 நாள்கள் மேற்கொள்ளப்படவுள்ள இப்பிரசாரத்தை, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகேயுள்ள இஷ்வாரி கஞ்ச் என்ற கிராமத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கிவைத்தார். தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான சூழலை நாடு முழுவதும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், மத்திய அரசால் தூய்மையே சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் இணைந்து செயல்பட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா, தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி நீத்தா அம்பானி ஆகியோர் முன்வந்துள்ளனர். 'தூய்மையே சேவை' பிரசார இயக்கத்தில் பங்கேற்க முன்வருமாறு, விளையாட்டு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

சூப்பர் 8: இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு!

கோழிக்கோடு: சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டதால் உணவகம் மீது தாக்குதல்

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

SCROLL FOR NEXT