தமிழ்நாடு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் இருவரின் மாத ஊதியத்தை நிறுத்திவைத்து உயர் நீதிமன்றம் அதிரடி!

DIN

சென்னை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் இம்மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ராசி மண்டபம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி பரீதா சவுக்கத். இவருக்குச் சொந்தமான இடத்தில்தான் மாதவரம் தாலுகா அலுவலகம் கடந்த 2015-ஆம் வருடம் மே மாதம் முதல் இயங்கி வருகிறது.முதலில் ஒரு வருடத்திற்கு வாடகை ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தொடர்ந்து மாத வாடகை முறையாக வழங்கப்படவில்லை. அத்துடன் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் தற்பொழுது புதிதாக வாடகை ஒப்பந்தமும் போடப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளை பரீதா சவுக்கத் பலமுறை தொடர்பு கொண்டு கேட்ட பொழுதும் முறையான பதில் இல்லை.

எனவே நிலுவையில் உள்ள வாடகைப்பணத்தை வழங்க வேண்டும் என்றும்,  புதிதாக முறையான வாடகை ஒப்பந்தம் செய்து கொள்ளவும் மாதவரம் தாலுகா அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி மூதாட்டி பரீதா சவுக்கத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, மாதவரம் தாலுகா அலுவலகம் மூதாட்டி பரீதா சவுக்கத்துக்கு  உடனடியாக நிலுவையில் உள்ள வாடகை பாக்கியினை வழங்க வேண்டும் என்றும், புதிய வாடகை ஒப்பந்தமும் விரைந்து போட வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வாடகை ஒப்பந்தம் போடப்படும் வரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், நிதித்துறை செயலர் ஆகியஇருவருக்கும் நடப்பு மாத ஊதியத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்றும் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT