முகப்பு
தமிழ்நாடு

டிடிவி தினகரன் இணைவாரா? அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதில்

ஓபிஎஸ்சை இணைந்தது போல தினகரன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லும் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

ஓபிஎஸ்சை இணைந்தது போல தினகரன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லும் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
ஓபிஎஸ்சை இணைந்தது போல தினகரன் இணைவது குறித்து காலம் பதில் சொல்லும். தினகரன் நாகரிகமாக பேச வேண்டும். ஜெனிவாவில் வைகோவுக்கு உரிய பாதுகாப்பு அளித்துள்ளதால் பிரதமர், முதல்வர் கண்டனம் தெரிவிக்க தேவையில்லை. 

ஜெயலலிதாவின் உடல்நிலையை அப்போலோ நிர்வாகி, சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டறிந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சசிகலா, தினகரன் எங்களுடன் விரைவில் இணைவர் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →