எனக்குப் பிடித்தவர் "அண்ணா': கருணாநிதி
"எனக்குப் பிடித்தவர் அண்ணா' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தமிழ்நாடுஎனக்குப் பிடித்தவர் "அண்ணா': கருணாநிதி
"எனக்குப் பிடித்தவர் அண்ணா' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
"எனக்குப் பிடித்தவர் அண்ணா' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாதிக்கு கழுத்துப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த "டிரக்யாஸ்டமி' குழாய் அண்மையில் தாற்காலிகமாக நீக்கப்பட்டவுடன், அவர் இவ்வாறு பேசியதாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கூறினார்.
கருணாநிதியின் 94 -ஆவது பிறந்தநாள் விழா மற்றும் சட்டப்பேரவை வைரவிழா என இரண்டு விழாக்களும் ஒருசேர ஜூன் 3 -ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து இப்போதே சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, கருணாநிதி பேசத் தொடங்கியுள்ளது குறித்து துரைமுருகன் வெளியிட்ட தகவல்:
டாக்டர்களின் கேள்விகளுக்குப் பதில்: திமுக தலைவர் கருணாநிதிக்கு மூச்சு விடுவதில் கடந்த ஆண்டு டிசம்பரில் சிரமம் ஏற்பட்டதையடுத்து கழுத்துப் பகுதியில் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டு மூச்சுக் குழலுடன் இணைக்கப்பட்டது. வீடு திரும்பிய பிறகும்கூட இந்தக் குழாய் அமைப்புடன்தான் பேச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை: கருணாநிதியின் கழுத்துப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் குறித்து அவரது கோபாலபுரம் இல்லத்தில் இரு தினங்களுக்கு முன்பு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது குழாய் அமைப்பை தாற்காலிகமாக அகற்றிய டாக்டர்கள், அவரைப் பேசுமாறு கூறினர். தொடர்ந்து "உங்களது பெயர் என்ன?' என டாக்டர்கள் கேட்டனர். அதற்கு "கருணாநிதி' என அவர் பதிலளித்தார். அடுத்ததாக உங்களுக்கு யாரைப் பிடிக்கும் எனக் கேட்க, "அண்ணா' என்றார். பின்னர் என்னை (துரைமுருகன்) காண்பித்து யார் என டாக்டர் கேட்க, "துரை' என கருணாநிதி பதிலளித்தார் என்றார் துரைமுருகன். இதையடுத்து, கருணாநிதியின் கழுத்துப் பகுதியில் குழாய் அமைப்பை டாக்டர்கள் மீண்டும் பொருத்தினர்.
விழாவில் பங்கேற்பு இல்லை: நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், வரும் ஜூன் 3 -ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தனது 94 -ஆவது பிறந்த நாள், சட்டப்பேரவை வைர விழா ஆகியவற்றில் கருணாநிதி பங்கேற்கமாட்டார் என்று துரைமுருகன் கூறினார்.