முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரன் நியமனம்! 

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:37 PM
பகிர்:

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக பாலச்சந்திரனை நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி முதல்வராக இருப்பவர் சி.பாலச்சந்திரன். 21 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இவரை தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக நியமனம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிப்பு ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது. பதவியேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தராக சி.பாலச்சந்திரன் இருப்பார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →