முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பாலில் கலப்படம் செய்ததற்கான ஆதாரம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம்

ஆவின் பாலில் கலப்படமோ அல்லது திருட்டோ நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 11:33 AM
பகிர்:


சென்னை: ஆவின் பாலில் கலப்படமோ அல்லது திருட்டோ நடந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த ஊரல் கிராமத்தில் 2014ம் ஆண்டு  ஆகஸ்ட் 19ல் ஆவின் டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்ட பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்வதாக புகார் எழுந்தது.

ஆவின் பாலில் தண்ணீர் கலந்து முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையைச் சேர்ந்த வாகன ஒப்பந்ததாரர் வைத்தியநாதன், அவரது மனைவி ரேவதி உட்பட 26 பேர் மீது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

Advertisement

இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றதில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், மனு மீது இன்று உத்தரவிட்ட நீதிபதிகள், வைத்தியநாதன் மற்றும் அவரது மனைவி ரேவதி உள்ளிட்டோரை விடுவித்து உத்தரவிட்டனர்.

மேலும், ஆவின் பாலில் கலப்படம் செய்யப்பட்டதற்கோ, திருட்டு நடந்ததற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இனியும் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்றும், ஆவின் பாலில் கலப்படம் செய்யப்படவில்லை என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.