முகப்பு
தமிழ்நாடு

பாமக போராட்டத்துக்கு தமாகா ஆதரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் புதன்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:23 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி பாமக சார்பில் புதன்கிழமை (ஏப்.11) நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாமக சார்பில் புதன்கிழமை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமாகா ஆதரவு அளிக்கும். 
நியாயத்துக்காகப் போராடும் தமிழ மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொண்டு, காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.