மேட்டூர் அனல் மின் நிலையத்தில் உள்ளிருப்புப் போராட்டம்
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன்கொண்ட நான்கு அலகுகளும், 600 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட ஒரு அலகும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். புதிதாக அமைக்கப்பட்ட 600 மெகாவாட் திறன்கொண்ட அலகில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் திங்கள்கிழமை பிற்பகலில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக 600 மெகாவாட் பிரிவில் மின் உற்பத்தி தடைபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.