முகப்பு
தமிழ்நாடு

நாம் தோனிக்கு வாக்களிக்கவில்லை: ஆர்.ஜே.பாலாஜி விடியோ வெளியீடு

40 எம்.பி-க்களும், 234 எம்.எல்.ஏ-க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும். மாறாகபோட்டியை நிறுத்துவது இதற்கு தீர்வாகாது. ஏனெனில் நாம் வாக்களித்தது இவர்களுக்குத் தான் தோனிக்கு அல்ல.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 6:12 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:12 PM

காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்துக்கூடாது என்று எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இந்த விடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது:

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாட்டின் கவனத்தை பெறுவதற்கு நமது 40 எம்.பி-க்களும், 234 எம்.எல்.ஏ-க்களும் ராஜிநாமா செய்ய வேண்டும். மாறாக போட்டியை நிறுத்துவது இதற்கு தீர்வாகாது. ஏனெனில் நாம் வாக்களித்தது இவர்களுக்குத் தான் தோனிக்கு அல்ல. இதை சிலர் தங்களது சுய ஆதாயத்துக்காக பயன்படுத்துகிறார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நான் வேலைக்கு சென்றால் மட்டுமே எனது குடும்பத்துக்கு உணவளிக்க முடியும். இளைஞர்களாகிய நீங்கள் இதுகுறித்து முழுமையாக தெரிந்துகொண்டு போராடுங்கள். உங்களை அடுத்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள விட்டுவிடாதீர்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.