முகப்பு
தமிழ்நாடு

ராணுவ கண்காட்சியில் மகேந்திர சிங் தோனி!

ராணுவ கண்காட்சியை இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:43 PM
பகிர்:

சென்னையை அடுத்த மகாபலிபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் பாதுகாப்பு தளவாடங்கள் தொடர்பான ராணுவ கண்காட்சி ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. இதில் ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்ள நாடுகள் தங்களது அதிநவீன ஆயுதங்களை காட்சிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த கண்காட்சியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புதன்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அங்கிருந்த ராணுவ வீரர்களிடம் கலந்துரையாடினார்.

கௌரவ ராணுவ அதிகாரியாக உள்ள தோனி சமீபத்தில் தனக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்ட போது ராணுவ சீருடையில் சென்று பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →