தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் ஜெயக்குமார்

DIN

பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வோரை என்கவுண்டர் செய்ய வேண்டும். பேராசிரியை நிர்மலா தேவி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அமைச்சர் பொறுப்பிலிருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பொறுப்புடன் பேச வேண்டும். தெருவில் செல்பவர்போல் பேசக்கூடாது.

அதிகாரி போல் இல்லாமல் அரசியல்வாதியாகத்தான் ராமமோகனராவ் செயல்பட்டார். ஜெயலலிதா சிகிச்சை விவகாரத்தில் ராமமோகனராவை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT