உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது: நீதிபதி கிருபாகரன் வேதனை
பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
பாலியல் பலாத்காரம் தொடர்பான விசாரணையில், நீதிபதி கிருபாகரன் எழுப்பிய 25 கேள்விகளுக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டது.
தமிழக டிஜிபி சார்பில் உதவி ஐ.ஜி. மகேஷ்வரன் பதில் மனுவை தாக்கல் செய்தார்.
Advertisement
Advertisement
அதில், பலாத்கார வழக்குகளில் தேசிய அளவில் 25% வழக்குகளில்தான் தண்டனை வழங்கப்படுவதாகவும், இது தமிழகத்தில் வெறும் 20% ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் கல்வி இல்லாததும், பெற்றோர் கவனிப்பு இல்லாததுமே பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
இது குறித்துக் கருத்துக் கூறிய நீதிபதி கிருபாகரன், பாலியல் குற்றங்களில் தண்டனை அளிக்கப்படும் வழக்குகளின் விகிதம் தமிழகத்தில் 5 சதவீதம் குறைவாக இருப்பதற்கு வேதனை தெரிவித்தார்.
மேலும், பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்ற முந்தைய விசாரணையின் போது உத்தரவிட்டும், இன்றைய விசாரணையின் போது மத்திய அரசு பதிலளிக்காததற்கு, நீதிபதி கிருபாகரன், மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்தார்.
நாடு தற்போதிருக்கும் நிலையில், பாலியல் பலாத்கார குற்றங்களைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்களுக்கு யாராலும் உதவ முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.