முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுனுக்கு ரூ.112 உயர்வு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.23, 936-க்கு விற்பனையானது.

Updated On : 19 ஏப்ரல் 2018, 12:59 am IST
பகிர்:

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் புதன்கிழமை பவுனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.23, 936-க்கு விற்பனையானது.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14 உயர்ந்து, ரூ.2,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையும் சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.42.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.42,400 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி):
1 கிராம் தங்கம் 2,992
1 பவுன் தங்கம் 23,936
1 கிராம் வெள்ளி 42.40
1 கிலோ வெள்ளி 42,400
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.