தமிழ்நாடு

பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது மிகுந்த மனவேதனை: எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை! 

பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை.. 

DIN

சென்னை: பெண்கள் எந்தக்கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை புரிந்துள்ளார்.

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்குத் தூண்டிய விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யாப்பட்டுளார். இதுதொடர்பாக சென்னையில் செவ்வாயன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித செய்தியாளர்களைச் சந்தித்தார்.

புதனன்று காலை இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவின் தேசிய செயலரான எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினைப் பதிவு செய்திருந்தார். அதில் திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழியினை கீழ்த்தரமாக விமர்சித்து இருந்தார். இதனால் அவருக்கு எதிராக திமுகவினர் சென்னையில் போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில் பெண்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கனிமொழி பற்றிய எச்.ராஜா ட்வீட்டுக்கு தமிழிசை எதிர்வினை புரிந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக் கட்சியைச்சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சிக்கப்படுவது எனக்கு மிகுந்த மனவேதனையைத் தருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT