தமிழ்நாடு

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: விசாரணையை தொடங்கியது சிபிசிஐடி போலீசார்

DIN

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை இன்று தொடங்கியுள்ளனர். 

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் கணிதத்துறை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, செல்லிடப்பேசியில் மாணவியரை தவறாக வழிநடத்தும் வகையில் உரையாடியதாக புகார் எழுந்தது. 

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் நிர்மலா தேவி அருப்புக்கோட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனது செல்லிடப்பேசி உரையாடலில் காமராஜர் பல்கலைக்கழகத்தையும், உயர்நிலையில் இருப்பவர்களையும் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி, டிஎஸ்பி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து 5 பேர் கொண்ட சிபிசிஐடி போலீசார் தேவாங்கர் கல்லூரியில் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT