தமிழ்நாடு

போராட்டத்தைத் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள்: மயக்கம் அடைந்த 27 பேருக்கு சிகிச்சை

DIN

'சம வேலைக்கு சம ஊதியம்' கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 27 பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பணிக்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பளமும் அதற்கு முன் பணியில் இணைந்தவர்களுக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. ஆறாவது ஊதியக் குழுவில் அடிப்படை ஊதியம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. இந்த ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை போலீஸார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் காவலில் வைத்தனர். 
இதையடுத்து திங்கள்கிழமை மாலை விளையாட்டு அரங்கத்திலிருந்து வெளியேற மறுத்த ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களுடன் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் போலீஸார் கொடுத்த உணவையும் ஆசிரியர்கள் சாப்பிடவில்லை.
ஆம்புலன்ஸ் மூலம்... இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை சோர்வு காரணமாக ஆசிரியர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. நேரம் செல்லச் செல்ல ஒவ்வொரு ஆசிரியராக மயங்கி விழுந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 27 ஆசிரியர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 3 ஆசிரியர்கள் சிகிச்சை பெற்றுத் திரும்பினர்.
போராட்டம் தொடரும்: அப்போது, கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பான பிரச்னைக்குத் தீர்வு காண ஒரு நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவிடம் மனு கொடுங்கள். மேலும் இது குறித்து முடிவெடுக்க 10 நாள்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டனர். நாங்கள் ஏற்கெனவே 8 ஆண்டுகளுக்கு மேலும் காத்திருந்து ஏமாற்றத்துக்கு உள்ளாகினோம். அதனால், கோரிக்கை நிறைவேறும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடரவுள்ளோம் என்றனர்.
மேலும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்ற ராஜரத்தினம் மைதானத்தில் போலீஸார் அன்றாட பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி எங்களை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்துக்கு இடம் மாற்றியுள்ளனர். ஏற்கெனவே இருந்த ராஜரத்தினம் மைதானத்தில் கழிவறைகளில் தண்ணீரை நிறுத்தி விட்டனர். மேலும் கலைந்து செல்லாவிட்டால் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என போலீஸார் எச்சரித்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT