தமிழ்நாடு

வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டவருக்கு 4 ஆண்டு சிறை

தினமணி

போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் உள்பட 9 பேர் சேர்ந்து, போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரு.2.46 கோடி கடன் பெற்றனர். இதுதொடர்பாக வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் 9 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது கார்த்திகேயன் ஆஜராகததால், அவர் மீதான வழக்கை தனியாக எடுத்து நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் மற்றவர்கள் மீதான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏற்கெனவே அவர்களுக்கு சிறை தண்டனை வழங்கியது.
 இந்த நிலையில் தன் மீதான வழக்கு விசாரணைக்காக கார்த்திகேயன் நீதிமன்றத்தில் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள 11 -ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் எம்.வி.தினகர் ஆஜராகி வாதிட்டார்.
 வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், குற்றம் சாட்டப்பட்ட கார்த்திகேயனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.24 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த அபராதத் தொகையில் ரூ.20 லட்சத்தை வங்கிக்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT