தமிழ்நாடு

உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகள் திறக்கக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம்

Raghavendran

மதுபோதையால் சாலைகளில் விபத்துகள் அதிகரித்த காரணத்துக்காக தொடரப்பட்ட வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், சிக்கிம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டு வேறு இடங்களில் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை சனிக்கிழமை நடைபெற்றது.

அதில், தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல் மதுக்கடைகளை திறக்கக்கூடாது. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலையாக அறிவிக்காமல் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT