முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் நலம் விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:23 PM
பகிர்:

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்குச் சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். 

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 28-ஆம் தேதி முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய உடல்நிலை சீராகி வருவதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து நலம் விசாரித்து செல்கின்றனர். 

படப்பிடிப்பு காரணமாக வெளிநாடு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் செவ்வாய்கிழமை சென்னைக்கு திரும்பிய போது மருத்துவமனைக்குச் சென்று ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, புதன்கிழமை காலை நடிகர் விஜய் மருத்துவமனைக்குச் சென்று ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். 

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் மற்றும் கவுண்டமணி புதன்கிழமை மாலை மருத்துவமனைக்குச் சென்று ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.