முகப்பு
தமிழ்நாடு

24 மணி நேரத்திற்குப் பிறகுதான் கருணாநிதி உடல்நிலை குறித்து கணிக்க முடியும்:  புதிய மருத்துவ அறிக்கை வெளியீடு    

24 மணி நேரத்திற்குப் பிறகுதான் கணிக்க முடியும் என்பதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:26 PM
பகிர்:

சென்னை: 24 மணி நேரத்திற்குப் பிறகுதான் கணிக்க முடியும் என்பதாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து புதிய மருத்துவ அறிக்கை ஒன்று காவேரி மருத்துவனை தரப்பில் இருந்து தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

திமுக தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  அவரது வயது மூப்பு தொடர்புடைய பிரச்னைகளின் காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை இயல்பாக வைத்திருப்பது சவாலாக உள்ளது.

அவர் தொடர் கண்காணிப்பு மற்றும் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார்.  அடுத்த 24 மணிநேரத்தில் அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் எதிர்வினையாற்றுவதைப் பொறுத்தே எதையும் முன் கணிக்க முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →