தமிழ்நாடு

ஆகஸ்ட் 14-ல்  திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு 

திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

DIN

சென்னை: திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் செவ்வாய் மாலை 06.10 மணியளவில் மரணமடைந்தார். பின்னர் புதனன்று அவரது உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் மெரீனா கடற்கரையில் அண்ணா சமாதி வளாகத்தின் உள்ளே நல்லடக்கம் செய்ப்பட்டது.

இந்நிலையில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் வெள்ளியன்று காலை சந்தித்தார். அதன் பின்னர் திமுக அவசர செயற்குழு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 14- ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்துவது தொடர்பாகவும், கட்சியின் பொதுக்குழுவை விரைவில் கூட்டுவது தொடர்பாகவும் இந்த செயற்குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமென்று தெரிகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு யார் என்பதை தீர்மானித்தல், மு.க.அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்தல் உள்ளிட்ட விஷயங்களுக்கு கட்சியின் பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க வேண்டும். எனவே அதை தீர்மானித்தல் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

முன்னதாக ஆகஸ்ட் 19-ஆம் தேதி அன்று கட்சியின் பொதுக்குழுவினை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டு, பின்னர் கருணாநிதியின் உடல்நலக் குறைபாடு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

இப்படி பண்ணிட்டீங்களே தலைவா! கூலி எப்படி இருக்கு?

கோடம்பாக்கத்தின் கொண்டாட்டம் ரஜினிகாந்த்!

ரஜினி 50! ஆயிரம் பூக்கள் மலரட்டும்!

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா

SCROLL FOR NEXT