தமிழ்நாடு

கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது - இல.கணேசன்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

DIN

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சியனரும் ஆதரவு தெரிவித்தனர். 

இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் சனிக்கிழமை ராஜபாளையத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  

"கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT