தமிழ்நாடு

இலங்கையில் தமிழக மீனவர்கள் 27 பேருக்கு காவல் நீட்டிப்பு

DIN


இலங்கை கடற்படையால் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேருக்கு வரும் 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மற்றும் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 27 பேர் கடந்த 11-ஆம் தேதி நான்கு நாட்டுப் படகுகளில் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையிடம் சிக்கினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்களைக் கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தனர். கைதான மீனவர்கள் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், வியாழக்கிழமை 27 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்ற நீதிபதி சபேஷன் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு மீனவர்களின் நீதிமன்றக் காவலை ஆக. 24 -ஆம் தேதி வரையில் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். 
இதனையடுத்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் மாதிரி எடுப்பது குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை

தனியாா் நிறுவனத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

என்னை தாக்கியவா்களும் நன்றாகப் படிக்க வேண்டும்: முதல்வரை சந்தித்த நான்குனேரி மாணவா் சின்னதுரை

குழந்தைத் திருமணம் கண்டறியப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT