தமிழ்நாடு

தமிழக வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் பழனிசாமி நாளை நேரில் ஆய்வு

DIN

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்கிறார்.

ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் குமாரப்பாளைம், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்கிறார். இதனை அமைச்சர் தங்கமணி உறுதிபடுத்தினார்.

அதுபோல கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியாறு அணையிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.  இதனால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியது.

இதனால், 20-ஆம் தேதி முதல் அடுத்த 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி, சனிக்கிழமை அறிவித்துள்ளார். இதனால் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்களை உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 2 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் தெரிவித்தள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT