தமிழ்நாடு

29-இல் தமிழக ஆளுநர் கோபிக்கு வருகை

தினமணி

கோபி முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான ஜி.எஸ்.லட்சுமணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதன்கிழமை (ஆகஸ்ட் 29) கோபிக்கு வருகிறார்.
 கோபிசெட்டிபாளையம் நகரில் வாய்க்கால் ரோட்டில் டி.எஸ்.ராமன்-சரோஜினி தேவி விடுதிகள் உள்ளன. இந்த விடுதியை கோபி முன்னாள் நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்டத் தியாகியுமான ஜி.எஸ்.லட்சுமணன் நிறுவினார்.
 இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பேரவை சார்பில் இந்த விடுதியில் ஜி.எஸ்.லட்சுமணன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 இந்த சிலை திறப்பு விழா புதன்கிழமை (ஆகஸ்ட் 29) காலை 10 மணிக்கு தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராகத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச் சிலையை திறந்து வைத்து சிறப்பரையாற்ற உள்ளார். மேலும், தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் நினைவாக சிறந்த சமூக சேவை ஆற்றியோருக்கு விருதுகளைஆளுநர் வழங்குகிறார்.
 விழாவில், தில்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் கே.எம்.வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங்கத் தலைவர் பி.மாருதி உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT