தமிழ்நாடு

சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதெமி விருது  

DIN

புது தில்லி: சஞ்சாரம் நாவலுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்வாண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் இலக்கிய உலகின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன்.  விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு என்னும் ஊரைச் சேர்ந்தவர்.  சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் இலக்கிய உலகில் நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆகிய தளங்களில் தன்னுடைய தொடர்ச்சியான பங்களிப்பை செலுத்தி வருகிறார்.

இவர் 2014-ஆம் ஆண்டு எழுதிய 'சஞ்சாரம்' என்ற நாவலுக்காக அவருக்கு தற்போது சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் மண்ணில் வறிய நிலையில் வாழும் நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றிக் கூறும் படைப்பாக 'சஞ்சாரம்' உருவாக்கப்பட்டுள்ளது. 

சாகித்ய அகாதெமி விருது கிடைத்ததற்காக தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

SCROLL FOR NEXT