தமிழ்நாடு

சட்ட விரோத பேனர்கள்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

DIN


சட்டவிரோத பேனர்கள் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சட்ட விரோதமாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது என முறையீடு செய்தார்.
அப்போது நீதிபதிகள், நீதிமன்றம் வரும் வழியில் நாங்களும் பார்த்தோம். நீதிமன்றம் உத்தரவின்படி, பேனர்கள் வைக்க முறையான அனுமதி பெற வேண்டும். ஆனால், எந்தப் பேனரிலும் அனுமதி பெற்றது தொடர்பான எந்த தகவலும் இடம் பெறவில்லை. 
உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் எந்த உத்தரவுகளையும் அதிகாரிகள் முறையாக கடைப்பிடிப்பது இல்லை. இதே நிலை நீடித்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை வரும் டிசம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது வைக்கப்பட்டிருந்த சட்ட விரோத பேனர்கள் தொடர்பாக ஏற்கெனவே தொடர்ந்த வழக்கும் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT