தமிழ்நாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு முன்னாள் உதவியாளரின் கவிதை அஞ்சலி (வைரல் விடியோ) 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பாடல் மூலம் அஞ்சலி செலுத்தும் விடியோ.. 

DIN

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைபிடிக்கப்படும் நிலையில், அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பாடல் மூலம் அஞ்சலி செலுத்தும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5 - ஆம் தேதி மரணமடைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று கடைபிடிக்கப்படுகிறது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜெயலலிதாவிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் பாடல் மூலம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.      

கோவிலுக்கு மாலை போட்டிருப்பது போன்ற உடையுடன் இருக்கும் அவர், ஜெயலலிதாவின் படம் பின்னணியிலிருக்க,

"இதயம் உன்னைப் பாடும் 
நல்ல எண்ணங்கள் மாலை  போடும்"

என்று துவங்கும் பாடலைப் பாடுகிறார். 

சுமார் 1 நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவின் இறுதியில் அவர் ஜெயலலிதாவின் மறைவைக் குறித்து, வருந்திப் பேசும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. 

விடியோ:

நன்றி: நியூஸ் 7 தொலைக்காட்சி     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 1 கோடி வரை வங்கிக் கடன்... முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் தொடக்கம்!

ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர்: ககிசோ ரபாடா விலகல்!

கூலி வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

கரையைக் கடந்த புயல் சின்னம்!

SCROLL FOR NEXT