தமிழ்நாடு

மேக்கேதாட்டுவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு: ஜி.கே.வாசன் கண்டனம்

DIN

புதிய அணை கட்டுவதற்காக மேக்கேதாட்டுவில் கர்நாடக அமைச்சர் ஆய்வு செய்ய உள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்காக நிபுணர் குழுவுடன் டிசம்பர் 7-ஆம் தேதி ஆய்வு நடத்த உள்ளதாக கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக அமைச்சரின் இந்த முயற்சியை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி நதி நீர் பங்கீட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

SCROLL FOR NEXT