தமிழ்நாடு

விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள்: வைகோ இரங்கல் 

விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலன் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை(50) இழந்து விட்டார்கள் என மதிமுக பொதுச்செயலர் வைகோ

DIN


சென்னை: விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலன் இயற்கை விவசாயி நெல் ஜெயராமனை(50) இழந்து விட்டார்கள் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தனது இரங்கல் தெரிவித்துள்ளார். 

இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் தீவிர விசுவாசியாக அவரது கருத்துகளை அப்படியே பின்பற்றி வந்தவர் நெல் ஜெயராமன். பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் கடந்த 15 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பயணம் செய்து 160க்கும் மேற்பட்ட அரியவகை நெல் விதைகளை சேகரித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை ஏற்படுத்தியவர்.  

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் உயிரிழந்தார்

நெல் ஜெயராமன் மறைவுக்கு வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாரம்பரிய நெல் வகைகளை கண்டறிந்து விவசாயிகள் விளைவிக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் விதைகளை சேகரித்து தொடர்ந்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு, தன்னம்பிக்கை  ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமன். அவரது மறைவால் விவசாயிகள் தங்களது உயிர் பாதுகாவலனை இழந்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார். 

நெல் ஜெயராமன் மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராக போராடியவர். பாரம்பரிய நெல் விதைகளை காப்பாற்றியமைக்காக மத்திய, மாநில அரசுகளின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் மழை, வெள்ளம்! தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்ட சாலைகள் மற்றும் வீடுகள்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

அன்புமணி ஆதரவு 3 எம்.எல்.ஏ-க்கள் பாமகவில் இருந்து நீக்கம்

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-62!

SCROLL FOR NEXT