தமிழ்நாடு

அரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது: திருமாவளவன்

DIN


மதுரை: அரசியல் நோக்கத்திற்காக மோடி அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். 

மதுரை  விமான நிலையத்தில் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில், கஜா புயல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  நடைபெறவுள்ள தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் படத்திற்கு முன்பு இளைஞா் ஒருவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். அவர் யாரெனத் தெரியாத நிலையில் பாமக எங்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். அவதூறு பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலை அரசியலாக மட்டுமே அணுக வேண்டும், சாதி ரீதியாக அணுக முடியாது என்றார்.

மேலும், மேக்கேதாட்டு அணை கட்ட ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது கண்டனத்துக்குரியது. இதுதொடா்பாக தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டியது பாராட்டுக்குரியது.

அரசியல் உள் நோக்கத்திற்காக மோடி அரசு அனைத்து வரம்புகளை மீறி கா்நாடகாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்து வருகிறது. கஜா புயல் உள்ளிட்டவைகளில் மத்திய அரசு தமிழகத்தை தொடா்ந்து வஞ்சித்து வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு சென்றடைந்த கள்ளழகர்!

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: சென்னை விடுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கலால் முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் பதில்மனு தாக்கல்!

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை மையம்!

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

SCROLL FOR NEXT