தமிழ்நாடு

குமாரபாளையத்தில் விதிமீறிய 13 சாயப் பட்டறைகள் மீது நடவடிக்கை

DIN

குமாரபாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் விதி மீறி இயங்கிய 13 சாயப்பட்டறைகள் மீது மாசுக் கட்டுபாட்டு வாரியம் சார்பில் சீல் வைத்தல், நூல்கள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 குமாரபாளையம் வட்டத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஜெயலட்சுமி, ஈரோடு மாவட்ட பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார் மற்றும் அலுவலர்கள் அனுமதியற்ற சாயப்பட்டறைகள் இயங்குவது தொடர்பாக கடந்த இரு நாள்களாக திடீர் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
 இதில், குமாரபாளையத்தை அடுத்த ஓலப்பாளையம், ஜேகேகே சுந்தரம் காலனி, பெரமகவுண்டர் தோட்டம், கோட்டைமேடு புறவழிச்சாலை, சக்தி நகர், அம்மன் நகர், வேமங்காட்டுவலசு பகுதிகளில் விதிகளை மீறி 8 சாயப்பட்டறைகள் இயங்குவது கண்டறியப்பட்டது.
 இதையடுத்து, இப் பட்டறைகள் அனைத்தும் சீல் வைத்து மூடப்பட்டதோடு, சாயமிட வைக்கப்பட்டிருந்த சுமார் 1000 கிலோ நூல் பறிமுதல் செய்யப்பட்டது.
 இதேபோன்று, குமாரபாளையத்தை அடுத்த சில்லாங்காடு, வெடியரசம்பாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் விதிமீறி இயங்கிய 5 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. விதிகளை மீறி இயங்குவதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT