தமிழ்நாடு

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தினமணி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வறண்ட காலநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது: கிழக்கத்தியக் காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் வரும் 10-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்று நாள்களுக்கு வறண்ட காலநிலை நிலவும். சென்னையில் ஞாயிற்றுக்கிழமை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்.
 காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி:
 தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் அதையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்தத்தாழ்வு நிலை காணப்படுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. இது வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து மழையை கொடுக்குமா அல்லது வேறு திசையில் செல்லுமா என்பது இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் தெரியவரும் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

SCROLL FOR NEXT