தமிழ்நாடு

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அயோத்தியில் கோயில் கட்டப்படும்

DIN

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். எனினும், அதற்கு காலவரையறை சொல்ல இயலாது என்றார் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.
 புதுக்கோட்டை மாவட்டம் வலையப்பட்டி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களுக்கு நிவாரணப் பொருளாக சோலார் விளக்குகளை வழங்கிய அவர் மேலும் செய்தியாளர்களிடம் கூறியது:
 புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கலை அமைப்பு சார்பில் பல்வேறு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 154 கிராமங்களில் எங்களின் தன்னார்வலர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 81 டன் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் நடத்தப்பட இருந்த ஆன்மிக நிகழ்ச்சி நீதிமன்ற தடை உத்தரவால் வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அனுமதி பெற்றுத்தான் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும் சில இடர்பாடுகள் காரணமாக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக நிகழ்ச்சியை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளோம். கோயிலில் தான் ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெற வேண்டும். அயோத்தி பிரச்னையில் நான் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறேன். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் விரைவில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். ஆனால் அதற்கு கால அவகாசம் எதுவும் கூற இயலாது. மொழி அடிப்படையில் தனிநாடு கேட்பது என்பது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் உள்ள பாரம்பரிய சிலைகளை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT