தமிழ்நாடு

பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல் செய்வது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு 

DIN

மதுரை: தமிழகஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல் செய்வது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யய வேண்டுமென்று, அரசுக்கு ஜாக்ட்டோ ஜியோ வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4-ஆம் தேதி முதல் நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி மதுரைக் கிளையில் லோகநாதன் என்பவர் சார்பில் கடந்த திங்கள் (3-ஆம் தேதி) காலை முறையீடு செய்யப்பட்டது. 

டிசம்பர் 10ம் தேதி அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க வேண்டும் என்று தனது மனுவில் லோகநாதன் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால், அதோடு சேர்த்து இத்தனையும் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

அதன்படி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

அப்போது இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை விரைவில் சமர்ப்பிப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்தை வரும் திங்கள்கிழமை (10.12.18) வரை ஒத்திவைக்க இயலுமா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

அதற்கு  ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு தெரிவிப்பதாக, ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

அதன்படி மதியம் 1.30 மணியளவில் ஆஜரான ஜாக்டோ ஜியோ அமைப்பின் வழக்கறிஞர், உயர் நீதிமன்றக் கிளையின் வேண்டுகோளை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம் திங்கள்கிழமை வரை தற்காலிகமாக  ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார். 

இதையடுத்து தமிழக அரசை வரும் 10-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது . 

இந்நிலையில் தமிழகஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வது தொடர்பாக 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யய வேண்டுமென்று, அரசுக்கு ஜாக்ட்டோ ஜியோ வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இதுவரை இந்த விவகாரம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்குகளில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையினை தமிழகஅரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். 

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியதாவது:

அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய வேறுபாடு குறித்து ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட சித்திக் ஆணையத்தின் அறிக்கை நிலை என்ன ஆனது? அதேபோல் கடந்த 21 மாதங்களாக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சித்திக் ஆணையத்திற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது

அத்துடன் தமிழகஅரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட ஸ்ரீதர் ஆணையத்தின் அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்பட்டு உள்ளது. அதன்மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  

இந்த விபரங்களை எல்லாம் சீலிட்ட கவரில் வைத்து இரு வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க  வேண்டும். 

இவ்வாறு உத்தரவிட்ட நீதிமன்றமானது வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாளை.யில் கால்வாய் கரைகள் சீரமைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு

தம்பதி படுகொலை: வடமாநில இளைஞர் கைது

குமரியில் வெயிலில் பணிபுரியும் போலீஸாருக்கு பழச்சாறு

சாலையோரத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

SCROLL FOR NEXT