தமிழ்நாடு

தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

DIN


தமிழகத்தில் 14, 15ம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது, வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் நிலவுகிறது. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இது மேலும் 14ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழகம் நோக்கி நகரக் கூடும்.

இதன் காரணமாக, 14, 15ம் தேதிகளில் தமிழகத்தின் கடற்கரைப் பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யக் கூடும். 

ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலையே கரை திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை, தெற்கு வங்கக் கடல் பகுதியில் மத்தியப் பகுதிக்கும், நாளை மறுநாள்  தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

SCROLL FOR NEXT