தமிழ்நாடு

சென்னை மெரினாவில் போலீசார் குவிப்பு

DIN

ஊர்க்காவல் படையினர் போராட்டத்தில் ஈடுபடலாம் என்கிற தகவலையடுத்து மெரினாவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் ஊர்க்காவல் படையில் சுமார் 16 ஆயிரம் பேர் உள்ளனர். சென்னையில் ஊர்க்காவல் படையில் சுமார்  1500 பேர் உள்ளனர். இந்த நிலையில் தெலங்கானா தேர்தல் பணிக்குச் சென்ற வீரர்களுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்; மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; அடையாள அட்டை வழங்க வேண்டும்; சம்பளத்தை உயர்த்த வேண்டும்; பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்க்காவல் படையினர் சென்னை எழும்பூரில் திடீரென சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறையின் கிழக்கு மண்டல இணையர் டி.எஸ்.அன்பு, ஊர்க்காவல் படை அதிகாரி மஞ்சித்சிங் ஆகியோர் ஊர்க்காவல் படை வீரர்களிடம் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த பேச்சுவார்த்தையில், ஊர்க்காவல்படையினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதன் பின்னரே, ஊர்க்காவல் படையினர் போராட்டத்தை கைவிட்டனர். 

இந்நிலையில் ஊர்க்காவல் படையினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு இன்று மீண்டும் போராட்டம் நடத்தலாம் எனத் தகவல் வெளியாகியது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT