தமிழ்நாடு

செந்தில் பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன்: டிடிவி தினகரன்

DIN

செந்தில் பாலாஜி திமுகவுக்கு பதில் அதிமுகவில் சேர்ந்திருந்தால் வருத்தப்பட்டிருக்க மாட்டேன் என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
4 மாதத்திற்கு முன்பு சொந்த காரணங்களுக்காக கட்சியை விட்டு விலகி இருப்பதாக செந்தில் பாலாஜி கூறினார். கடைசியாக தர்மபுரியில் தான் அவரை சந்தித்தேன். 

செந்தில் பாலாஜி சென்றதால் வருத்தம் இல்லை, எங்கிருந்தாலும் வாழ்க. ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்த திமுகவில் செந்தில் பாலாஜி சேர்ந்தது வருத்தம் அளிக்கிறது, அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். 

செந்தில் பாலாஜி சென்றதால், அமமுகவிற்கு பாதிப்பில்லை. எந்த காலத்திலும் துரோகிகளுடன் இணைய மாட்டேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் மேல் முறையீடு கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முன்னதாக இன்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமமுகவில் இருந்து விலகி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT