தமிழ்நாடு

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

DIN


சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் ஜனவரி 21ம் தேதிக்குள் ஆன்லைன் மருந்து விற்பனை தொடர்பாக புதிய வரைவு விதிமுறைகளை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவும் பிறப்பித்துள்ளது.

ஆன்லைன் மருந்து விற்பனைக்கான தடையை நீக்கக் கோரி ஆன்லைன் மருந்து விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில், விதிகளை வகுக்கும் வரை ஆன்லைனில் மருந்துகளை விற்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

விசாரணையின் போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதாக மருந்து விற்பனையாளர் சங்கம் வாதத்தை முன் வைத்தது.

ஆன்லைன் மருந்து விற்பனையால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் குறிப்பிட்டிருந்த நிலையில், ஆன்லைன் மருந்து விற்பனை குறித்து புதிய விதிகளை வகுத்து அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம், ஜலகண்டபுரம் மேம்பாலம் அருகே 3 உடல்கள்: கொலையா?

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

SCROLL FOR NEXT