தமிழ்நாடு

பெங்களூரு சிறையில் சசிகலா - தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்திப்பு 

DIN

பெங்களூரு:   சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள சசிகலாவை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் திங்களன்று சந்தித்தனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சமீபத்தில் 2 நாள் விசாரணை நடத்தினர்.   

இந்நிலையில் சசிகலாவை திங்களன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் சந்தித்து பேசினார். 

அவருடன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பழனியப்பன், முருகன், கதிர்காமு, பார்த்திபன், சுப்பிரமணியன், தங்கதுரை, உமாமகேஸ்வரி, மாரியப்பன் கென்னடி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி ஆகியோரும் சந்தித்து பேசினர்.

முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தி.மு.க.வில் சேர்ந்தபிறகு தினகரனை சசிகலா முதன்முறையாக சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT