தமிழ்நாடு

பெண் காவலருக்கு முத்தம் கொடுத்த காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்!

DIN


திருச்சி சோம்பரசம் பேட்டை காவல் நிலையத்தில், பணிபுரிந்த பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில், பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை என்ற ஊரில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிகிறார் பாலசுப்ரமணியன்(50). இவர் கடந்த, 12 ஆம் தேதி இரவு பணியில் இருந்த முதல்நிலை பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், முத்தம் கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் காவலர் கூறியுள்ளார். பெண் காவலருக்கு உதவி ஆய்வாளர் முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் காவலர், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியன் குறித்து புகார் அளித்தார்.

இரவுப் பணியில் அமர்ந்திருந்த பெண் காவலரிடம், அத்துமீறுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. 

இந்நிலையில், பெண் காவல் அளித்த புகாரின் அடிப்படையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT