தமிழ்நாடு

ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை: மீண்டும் விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வரை குறைந்து வந்த பெர்டேரால், டீசல்

DIN


ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் வரை குறைந்து வந்த பெர்டேரால், டீசல் விலைகள், தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மீண்டு உயரத்தொடங்கி உள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டது. அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என உச்சத்தை தொட்டது. 

தொடர் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் இறங்குமுகமாக இருந்து வந்தது. 

இந்த நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிஸோரம், தெலங்கானா ஆகிய 5 மாநில தேர்தலுக்காக இறங்கு முகமாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அதவாது 57 நாட்களுக்கு சில தினங்களாக குறைந்தும், அதிகரித்தும் வந்தநிலையில், நேற்று திங்கள்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர தொடங்கி உள்ளது. 

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் உயர்ந்து ரூ.73.29 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் உயர்ந்து ரூ.68.14 ஆகவும் விற்பனை ஆகிறது.

5 மாநில தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மீண்டும் விலை உயர்ந்து வருவது ஆளும் மத்திய அரசு மீது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருகும் அழகில்... ப்ரீத்தி!

தென்நாடு பாடல்!

ராமராக ராகுல்; ராவணனாக அமலாக்கத்துறை..! உ.பி.யில் காங். வெளியிட்ட கேலிச்சித்திரம்!

69 ரன்களில் சுருண்ட தென்னாப்பிரிக்கா; இங்கிலாந்து அபார வெற்றி!

பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இணைந்தார் எம்எல்ஏ சஞ்சீவ் குமார்

SCROLL FOR NEXT