தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம்  

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.    

DIN

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.    

ரூ.1,264 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மருத்துவமனையை 45 மாதங்களில் நிர்மாணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இரவு தெரிவித்தாவது:

தமிழகத்தில் உள்ள மதுரையில் ரூ.1,264 கோடி மதிப்பீட்டிலும், தெலங்கானா மாநிலத்தில் பீபீ நகரில் ரூ.1,028 கோடி மதிப்பீட்டிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள்அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் மக்கள் நலனுக்கான பரிசாகும். 

பிரதமர் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் (பிஎம்எஸ்எஸ்ஒய்) கீழ் புதிதாக மதுரையில் அமையவுள்ள மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் அவசர கால சிகிச்சை, காய சிகிச்சை, ஆயுஷ் மருத்துவ சிகிச்சை, தனியார் படுக்கை, ஐசியு சூப்பர் ஸ்பெஷாலிட்டி சிகிச்சை உள்ளிட்டவை அடங்கும். 

மேலும், 15 சூப்பர் ஸ்பெஷாலிட்டி துறைகள் இடம் பெறும். இவை முழுமையான செயல்பாட்டுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையாக இருக்கும். மேலும், ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் ஒரு நாளைக்கு 1500 புறநோயாளிகளுக்கும், உள்நோயாளி பிரிவில் மாதத்துக்கு 1,000 பேருக்கும் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படுத்தப்படும். 

தற்போது நாட்டில் 11 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன. இந்த மருத்துவமனையானது வேலைவாய்ப்பு, கவனிப்பு, சிகிச்சை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டிருக்கும். இந்த மருத்துவமனையுடன் மருத்துவக் கல்லூரியும், அதில் ஆயுஷ் பிரிவுக்கு தனிக் கட்டடம், அரங்கம், இரவு நேரத் தங்கும் குடில், விருந்தினர் இல்லம், விடுதிகள், குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இந்நிலையில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு  பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT