தமிழ்நாடு

பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்: ஸ்டாலின் 

பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

சென்னை: பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் அனுமதியில்லாமல் பேனர்கள் வைப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் பதாகைகள் வைப்பதை கழகத்தினர் முழுமையாகத் தவிர்த்திட வேண்டும் என்று திமுக  தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பான செய்தியொன்றை 'ரீட்வீட்'  செய்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது 
.
வரவேற்கத்தக்க ஒன்று! பொதுமக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது என நான் பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். ஆனாலும், சில இடங்களில் வைக்கப்படுவதை அறிகிறேன், அதனை கழகத்தினர் முழுமையாக தவிர்த்திட வேண்டும். அது சட்டப்படியானது மட்டுமல்ல. பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் செயல்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2-ஆம் கட்ட SIR பணிகள்! கவனிக்க வேண்டியவை என்னென்ன?

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

SCROLL FOR NEXT