பெண் மாவோயிஸ்டுகளுக்கு பிப்.12 வரை காவல் நீட்டிப்பு
கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு வரும் 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு வரும் 12 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளை தெருவில் பதுங்கியிருந்த சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46) ஆகியோரை க்யூ பிரிவு போலீஸார் கடந்த 2016-ல் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இவர்களுக்கு உதவியதாக மதுரை மாவட்டம், ஆலங்குளம் அன்பு நகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை (35) கடந்தாண்டு ஜனவரி மாதம் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மூவருக்கும் பிப்.12 வரை காவலை நீட்டித்து நீதிபதி நம்பிராஜன் உத்தரவிட்டதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அவர்கள் மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.