முகப்பு
தமிழ்நாடு

பாவம் செய்தவர்கள் என்று கூறிய பாபா ராம்தேவை புற்றுநோய் கருத்தரங்குக்கு அழைப்பதா?

பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் புற்றுநோய் வரும் என்று கருத்துக் கூறிய பாபா ராம்தேவ், ஐஐடி சென்னை நடத்தும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சிக் கருத்தரங்குக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

Updated On : 7 பிப்ரவரி, 2018 at 5:49 PM
பகிர்:


சென்னை: பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் வகையில் புற்றுநோய் வரும் என்று கருத்துக் கூறிய பாபா ராம்தேவ், ஐஐடி சென்னை நடத்தும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சிக் கருத்தரங்குக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.

பிப்ரவரி 8ம் தேதி நடைபெறும் இந்த கருத்தரங்கு டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற உள்ளது. புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை: பழங்கால சிகிச்சை முதல் தற்போதைய நவீன சிகிச்சை வரை என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்குக்கு சிறப்பு விருந்தினராக பாபா ராம்தேவ் அழைக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு ராம்தேவ் பேசுகையில், கர்மாவை அடிப்படையாகக் கொண்டே அனைத்தும் அமையும். நமது பிறப்பு மற்றும் இறப்பு அனைத்துமே கர்மாவுடன் தொடர்புடையது. பல காரணங்கள் இருக்கின்றன. ஒருவருக்கு வரும் நோய்க்கும், அவர் செய்யும் கர்மாவே காரணம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.