தமிழ்நாடு

விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கு: மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

DIN

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில், மேலும் ஒருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 1.33 லட்சம் பேர் எழுதினர். தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால் இத்தேர்வில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக தேர்வு எழுதியவர்கள் புகார் தெரிவித்தனர்.
அப்புகாரின் அடிப்படையில் தேர்வு வாரியம், சென்னை காவல்துறையில் புகார் செய்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து, தேர்வில் முறைகேடு செய்ததாக 6 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொளத்தூரைச் சேர்ந்த சுரேஷ்பால், முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் ஆகிய இருவரும் கடந்த வாரம் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த வழக்கில் ஏற்கனெவே கைது செய்யப்பட்ட மதுரவாயல் ஷேக்தாவூத் (35) என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஷேக்தாவூத்திடம், போலீஸார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை புதன்கிழமை வழங்கியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT