தமிழ்நாடு

மகன் இறந்ததால் மனிதாபிமான அடிப்படையில் மீனவர்கள் 4 பேரை விடுதலை செய்தது இலங்கை

DIN

மகன் உயிரிழந்து விட்டதால் மனிதாபிமான அடிப்படையில், இலங்கை சிறையிலிருந்த மண்டபம் மீனவர்கள் 4 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து கடந்த ஜனவரி மாதம் மீன்பிடிக்கச் சென்றபோது, இலங்கைக் கடற்படையினர் ஒரு படகையும், அதிலிருந்த மீனவர்களான ஜெயசீலன், சீனி இப்ராஹிம்ஷா, பாலகுமார், முனியசாமி ஆகியோரை கைது செய்தனர்.பின்னர் இவர்கள், ,ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். 
இந்நிலையில், ஜெயசீலன் மகன் ஸ்டீபன் புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழ்ந்துவிட்டார். இலங்கை சிறையில் உள்ள தந்தை வந்தவுடன் தான் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும், எனவே சிறையில் உள்ள ஜெயசீலனை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்யவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனடிப்படையில், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற இலங்கை அரசு, ஜெயசீலன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட 3 மீனவர்களையும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்ய நீதிமன்றத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. அதன்பேரில், ஊர்க்காவல் துறை நீதிமன்றம் 4 மீனவர்களையும் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.
அதையடுத்து விடுக்கப்பட்ட 4 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த மீனவர்கள் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகன் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, இந்த 4 மீனவர்களும் மனிதபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கை பிரதமர் இந்த மாதத்தில் இந்தியா வர உள்ளதால், மேலும் 109 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT