ஜெயலலிதா ஓவியத்துக்கு 100 ஆண்டுகள் ஆயுள்காலம்
சட்டப் பேரவை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஓவியம் 100 ஆண்டுகள் அப்படியே இருக்குமென அதை வரைந்த ஓவியரும், கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.மதியழகன் தெரிவித்தார்.
சட்டப் பேரவை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஓவியம் 100 ஆண்டுகள் அப்படியே இருக்குமென அதை வரைந்த ஓவியரும், கவின்கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வருமான டி.மதியழகன் தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்தை வரைந்தது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. எனது கவின்கலைக் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள், முதல்வர்கள் ஆகியோரின் அறிவுரையைப் பெற்று இப்பணிகளை மேற்கொண்டேன். மறைந்த முதல்வரின் ஓவியம் அழகுற அமையப் பெற்றதற்கான பெருமை அனைவரையும் சாரும்.
இரண்டு படங்களும்...சட்டப் பேரவையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்தை, 1992-ஆம் ஆண்டு கல்லூரியின் முதல்வராக இருந்த ஏ.அல்போன்சோ வரைந்து பேரவைச் செயலகத்துக்கு அளித்தார்.
இப்போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வரைந்து அளிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளேன். ஜெயலலிதாவின் ஓவியத்தை வரைவதற்காக வெளிநாடுகளில் இருந்து உயர்ரக வண்ணங்கள் வரவழைக்கப்பட்டன.
இந்த வண்ணங்களைக் கொண்டு ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் 100 ஆண்டுகளுக்கு அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும் என்றார் மதியழகன்.